SELANGOR

பெடுலி சேஹாட் திட்டதின் பங்கேற்பாளர்கள் ஒரு மில்லியனை எட்டி அதன் இலக்கை அடைந்தது

காப்பார், டிசம்பர் 6:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களின் (ஐபிஆர்) வழி பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டம் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒரு மில்லியன் பங்கேற்பாளர்களை பெடுலி சேஹாட் திட்டம் எட்டியுள்ளது என்று சிலாங்கூர் மாநில சுகாதாரம், சமூக நலன், மகளிர் மற்றும் குடும்ப நலத்துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார். இந்த அடைவு நிலையைக் கண்டு பெருமிதம் கொள்வதாகவும், மாநில அரசாங்கத்தின் இலக்கு இத்திட்டத்தின் மூலம் மக்கள் பயன் அடைந்துள்ளனர் என்று பூரிப்போடு தெரிவித்தார்.

”   நாம் செயல்படுத்தும் திட்டங்கள் மக்களுக்கு தேவையான மற்றும் நல்வாழ்வு தரும் திட்டங்களாக அமைகிறது. நாம் மக்களுக்காக காத்துக் கொண்டு இருக்கவில்லை, மாறாக மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று காப்பாரில் ஸ்ரீ செமந்தா அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற ஐபிஆர் சூறாவளி பயண கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தெரிவித்தார். இந்த பயணத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் கெஅடிலான் கட்சியின் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

2016-இல், மாநில அரசாங்கம் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்திற்கு ரிம 125 மில்லியனைக் ஒதுக்கீடு செய்து 1 மில்லியன் பங்கேற்பாளர்களை இலக்காக கொண்டு செயல் பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

இதனிடையே, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநில அரசாங்கத்தை அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணிக்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது என்றார்.  ஐபிஆர் விரிவாக்கம் செய்யப்பட்டு 42 திட்டங்கள் 2018-இன் வரவு செலவு திட்டத்தில் இணைக்கப் பட்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

#தமிழ் அரசன்


Pengarang :