NATIONAL

சத்தமின்றி 9 வகை தபால்வழி வாக்கு

பெட்டாலிங் ஜெயா,ஜன 10:

எந்தவொரு அறிவிப்புமின்றி சத்தமில்லாமல் அமைதியான முறையில் தேர்தல் ஆணையம் 9 வகையான தபால் வழி வாக்களிக்கும் பிரிவினை உருவாக்கியிருப்பது பெரும் ஐயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக பெர்சே 2.0 கூறியது. இந்த முறையால் பெரும் சவால்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதோடு அஃது தேசிய முன்னணியின் வெற்றிக்கு சாதகமான சூழலையும் உருவாக்கும் என அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார்.

இச்சூழலில் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் பல்வேறு சர்ச்சைகள் உருவாகலாம் என கூறிய மரியா சின் கடந்த 13வது பொதுத் தேர்தலில் தபால் வழி வாக்குகள் சுமார் 30 நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு வழிவகுத்த நிலையில் அஃது 14வது பொதுத் தேர்தலிலும் தொடரலாம் என்றும் அவர் நினைவுறுத்தினார்.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் போது அந்த 30 தொகுதிகளிலும் தேசிய முன்னணி தோல்வியை தழுவியிருந்த நிலையில் தபால் வழி அளிக்கப்பட்ட வாக்குகள் மூலம் அந்த முடிவுகள் தேசிய முன்னணிக்கு சாதகமானதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

இம்முறை,சிறைச்சாலில் இலாக்கா,தீயணைப்பு மீட்புப்பணி,கடல்படை,
அரசு சுகாதார நிறுவனம்,தன்னார்வ காவல்துறை,பொது பாதுகாப்பு இலாகா,குடிநுழைவு இலாகா,இயற்கை பேரிடர் ஏஜென்சி மற்றும் பதிவு இலாகா ஆகியவை இம்முறை தபால்வழி வாக்களிக்கும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,தேர்தல் ஆணையம் இந்த 9 பிரிவை சார்ந்தவர்களின் வாக்குகளும் அதன் நம்பகத்தன்மையை கொண்டிருப்பதோடு அஃது அதன் ரகசியம் பாதுகாக்கும் நிலையில் இருப்பதையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் பெர்சே கேட்டுக் கொண்டது.

#தமிழ் அரசன்


Pengarang :