SUKANKINI

கால்பந்து அரசியல் மேடையல்ல – நோர் ஒமாருக்கு அமிர் நினைவுறுத்து

ஷா ஆலம்,பிப்ரவரி02:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒருபோதும் கால்பந்து உட்பட எந்தவொரு விளையாட்டையும் அரசியல் காரணியத்திற்காக பயன்படுத்தாது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அமிரூடின் ஷஹாரி தெரிவித்தார்.

நாட்டின் பொதுத் தேர்தலுக்காக விளையாட்டை அரசியல் காரணியத்திற்கு பயன்படுத்துவது எங்களின் இலக்கு அல்ல.அதுமட்டுமின்றி,இதுபோன்றவைகளை அரசியலாக்குவதும் அர்த்தமற்றது என்றும் அவர் கூறினார்.

தங்களின் அரசியல் காரணத்திற்கா கால்பந்தை அரசியலாக்கும் முயற்சியில் தேசிய முன்னணியில் ஒருதரப்பு இறங்கியிருப்பதாகவும் சுடிக்காண்பித்த அவர் கால்பந்து அரசியல் மேடையல்ல என்று எச்சரித்தார்.

தேசிய முன்னணி மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றினால் ஷா ஆலம் அரங்கை சிலாங்கூர் மாநில கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ அரங்காய் ஒப்படைப்போம் என டான்ஸ்ரீ நோர் ஓமார் வெளியிட்ட கருத்திற்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்தார்.

கால்பந்தை அரசியலாக்கி லாபம் தேட வேண்டாம் என்றும் நினைவுறுத்திய அவர் நிலவும் பிரச்னைக்கு தீர்வு கண்டு மீண்டும் அதனை சரியான இலக்கில் பயணிக்க வைப்பதே தற்போதைய மாநில அரசாங்கத்தின் இலக்கு என்றும் கூறினார்.

இதற்கிடையில்,
சிலாங்கூர் மாநில வாழ் மக்கள் விவேகமானவர்கள்.அவர்கள் எந்நிலையிலும் கால்பந்து அரங்கு விவகாரத்தையும் தேர்தலையும் முடிச்சிப் போட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் என்பது நீண்டதொரு பயணம்.கால்பந்துக்காக மக்கள் தேர்தலில் தங்களின் முடிவை மேற்கொள்வார்கள் என்பதெல்லாம் விவேகமற்றது.சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் எந்தவொரு முடிவும் மக்கள் நலன் சார்ந்திருக்கும் என்பதை சிலாங்கூர் வாழ் மக்கள் நன்கு அறிவர் என்றும் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாநில கால்பந்து விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான ஒன்றை சிறந்த முறையில் நிரந்திரமான தீர்வினை ஏற்படுத்தவே முனைகிறது என்றும் விவரித்தார்.


Pengarang :