SELANGOR

கோல்டன் விலாவை சீரமைப்பு செய்ய ரிம 2.18 மில்லியன் ஒதுக்கீடு !!!

கிள்ளான், பிப்ரவரி 15:

மாநில அரசாங்கம் ‘செரியா’ திட்டத்தின் வழி கோல்டன் விலா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 11 மின் தூக்கிகளை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக ரிம 2.18 மில்லியன் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டை வழங்கி உள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் அரசியல் செயலாளர் மற்றும் ஸ்ரீ மூடா சட்ட மன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபியி கூறினார். பரிவுமிக்க மாநில அரசாங்கம், இந்த அடுக்குமாடி குடியிருப்பு செழிப்புடன் காட்சியளிக்க வழிவகை செய்துள்ளது என்று தெரிவித்தார்.

”  இன்று மேற்பார்வை செய்த போது , பொது மக்களின் சிரமங்களை புரிந்து கொண்டு அடிப்படை மின் தூக்கிகளை மறுசீரமைப்பு செய்ய மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இங்கு சில குறைபாடுகள் இருக்கின்றன, ஆனாலும் குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்,” என்று கோல்டன் விலா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பார்வையிட்ட பிறகு சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

 

 

 

 

 

சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை வாரியத்தின் தலைமை இயக்குநர் நோர்ஸாத்துன் அய்னி முகமட் காஸ்ஸீம் கூறுகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மறுசீரமைப்பு பணிகள் பூர்த்தி அடையும் என்று விவரித்தார்.

”   மறுசீரமைப்பு பணிகள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும். இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் பணிகள் பூர்த்தி அடையும். மாநில அரசாங்கம், சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கழகத்தின் (பிகேஎன்எஸ்) துணை நிறுவனமான சிலாங்கூர் தொழில்துறை கார்ப்பரேஷனை (எஸ்ஐசி) மின் தூக்கிகளை மறுசீரமைப்பு செய்ய நியமிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார் .


Pengarang :