SELANGOR

காப்பாரில் மக்களுடன் ஒரு கலந்துரையாடல்

காப்பார், மார்ச் 11:

காப்பார் நகரம் என்றாலே இந்திய சமுதாயத்திற்கு மிக முக்கிய நகரமாகும். முன்பு பல தோட்டங்கள் நிறைந்த பகுதியான காப்பார் நகரம் இன்று அழிக்கப்பட்டு வீடமைப்பு பகுதிகளாக காட்சியளிக்கிறது. இருந்தாலும், இந்தியர்கள் இன்றும் தோட்டப்புற சாயலிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வேளையில் , கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் மற்றும் ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று மாலை காப்பார் நகரில் மக்களோடு இணைந்து களம் இறங்கினார். பல்வேறு மாநிலத்தின் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களை (ஐபிஆர்) இந்திய சமுதாயத்திற்கு விளக்கம் அளித்தார்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் எதிர் வரும் 14-வது  பொதுத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை மிகத் துல்லியமாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், காப்பாரில் எதிர் நோக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் பல அரசு சாரா இயக்கங்கள் கலந்து கொண்டு சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இருந்தாலும், இந்தியர்களுக்கு மாநில அரசாங்கத்தின் திட்டங்கள் சென்றடையவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திரு. ஜெயச்சந்திரன், காமியா மோகன், கிள்ளான் நகராண்மை உறுப்பினர் செபஸ்டியன் மற்றும் கெஅடிலான் கட்சியின் அடிமட்ட தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

#தமிழ் பிரியன்

 

 


Pengarang :