SELANGOR

ரூமா சிலாங்கூர்கூ 2.0 விலைகள் கட்டுப்படுத்தப்படும்

ஷா ஆலாம், மார்ச் 28:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் கொண்டிருக்கும் ரூமா சிலாங்கூர்கூ 2.0வின் வரையறை மிகவும் நுண்ணியமாகவும் விவேகமாகவும் ஆராயப்பட்டு வீடுகளின் விலையை கட்டுப்படுத்தும் சாத்தியத்தை கொண்டிருக்கும்.மேலும்,கட்டப்படும் ஒவ்வொரு வீடுகளும் வெ.250,000க்கு உட்பட்டிருக்க வேண்டும் எனும் வரையறையை கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் வீடமைப்பு,கட்டுமானம் மற்றும் நகர்புற நல்வாழ்வின் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டார் நினைவுறுத்தினார்.

முன்பு 10 ஏக்கருக்கு மேற்பட்ட வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வெ.250,000 இருந்த விலையை தற்போது வெ.220,000 ஆக குறைதுள்ளதாகவும் கூறிய அவர் கட்டப்படும் வீடுகள் மக்களின் வசதிகளுக்கு ஏற்ப இருப்பதோடு அஃது அனைத்து அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றார்.
இந்த தனித்துவமான அம்சங்களில் வீட்டின் கழிப்பறை மற்றும் கூரைப்பகுதிகள் சரியான மற்றும் தரமான பொருட்களால் அமைக்கப்படிருக்கவும் வேண்டும் என்றும் விவரித்த அவர் வீடுகளை கட்டும் கட்டுமான நிறுவனங்கள் அவர்கள் கட்டும் வீடுகளில் வெ.42,000 முதல் வெ.200,000ஐயும் உட்படுத்தியிருக்க வேண்டும் என்றும் விளக்கினார்.

சிலாங்கூரில் மேற்கொள்ளப்படும் ரூமா சிலாங்கூர்கூ வீடமைப்பு திட்டங்கள் ஒவ்வொன்றும் மக்களின் நலனை முன்னிறுத்தியும் அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கியும் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :