Indonesian President Joko Widodo inspects a guard of honour during a ceremonial reception at the Presidential Palace in New Delhi on December 12, 2016. / AFP / MONEY SHARMA (Photo credit should read MONEY SHARMA/AFP/Getty Images)
ANTARABANGSA

மகாதீருக்கு வாழ்த்துகள் – மலேசியா இந்தோனேசிய உறவு மேலும் உயிர்ப்பிக்க வேண்டும்!!

ஷா ஆலாம்,மே11:

இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடுடூ நாட்டின் 7வது பிரதமர் துன் மகாதீருக்கு வாழ்த்து கூறியதோடு இரு நாடுகளின் உறவு மேலும் உயிர்ப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஜோக்கோவி என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் தொலைபேசி மூலம் இதனை தெரிவித்தார்.பாக்காத்தான் ஹராப்பானின் வெற்றிக்கும் வாழ்த்து கூறிய அவர் மலேசியாவின் 14வது பொதுத் தேர்தல் சுமூகமாக நடைபெற்றத்தையும் வாழ்த்தினார்.

ஜனநாயக முறையில் தேர்தல் சிறப்பாக நடைபெற்றதையும் சுட்டிக்காண்பித்த அவர் இருநாடுகளின் உறவு தொடர்ந்து சிறந்த முறையில் உயிர்ப்பிக்க வேண்டும் என்றார்.

மேலும்,துன் மகாதீரின் தலைமைத்துவத்தில் மலேசியா மீண்டும் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் என்று கூறிய அவர் இந்தோனேசியாவுடனான உறவும் வலுப்பெறும் என்று நம்புவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் 93 வயதில் பிரதமராக பதவி ஏற்று சாதனை புரிந்திருக்கும் துன் மகாதீரின் ஆரோக்கியம் நீண்டக்காலத்திற்கு உயிர்ப்பிக்கவும் அவர் நன்முறையில் நாட்டை வழிநடத்தவும் இறைவனை இறைஞ்சுவதாகவும் கூறினார்.

1981 முதல் 2003 ஆம் ஆண்டு வரை சுமார் 22ஆண்டுகள் பிரதமராக இருந்து ஓய்வு பெற்ற துன் மகாதீர் மீண்டும் நாட்டின் 14வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டின் 7வது பிரதமராக பதவி ஏற்றார்.அவரது இச்சாதனை உண்மையில் போற்றுதல்குரியது என்றார்.

மத்திய அரசை கைப்பற்றியதோடு மட்டுமின்றி சிலாங்கூர் மற்றும் பினாங்கில் ஆட்சியை தற்காத்துக் கொண்டதோடு ஜோகூர்,நெ.செம்பிலான்,மலாக்கா மற்றும் கெடா ஆகிய மாநிலங்களையும் கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :