NATIONAL

காலிட்: பிஎன் அரசியல் நியமனங்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்

ஷா ஆலம், ஜூலை 7:

பிஎன் காலத்தின் கூட்டரசு பிரதேச அமைச்சின் அரசியல் நியமனங்களை உடனடியாக  துறக்க வேண்டும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சாமாட் கூறினார். சம்பந்தப்பட்டவர்களை பதவி நீக்கம் செய்து அவர்களை அவமதிக்கும் செயலை செய்யப் போவதில்லை என்று விவரித்தார்.

” அவர்கள் தற்போதைய சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும், சிலர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதற்கு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் கடிதத்தை கொடுக்க வேண்டும். காரணங்களை கூற வேண்டாம். இதில் என் அண்ணன் டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சாமாட் பெல்டா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே, அம்னோ அல்லது பிஎன் அரசியல் நியமனங்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.


Pengarang :