SUKANKINI

ஆசிய நிலையிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஸ்ரீ அபிராமி நான்கு தங்கம் வென்று சாதனை !!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22:

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய நிலையிலான ஸ்கேட்டிங் (பனித் தரையில் நடமாடும் சாகச போட்டி)போட்டியில் மலேசியாவை சார்ந்த 6 வயது சிறுமி ச.ஸ்ரீ அபிராமி நான்கு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

கடந்த 5ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் முதல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்த அபிராமி மலேசியாவை பிரதிநிதித்து ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற முதல் மலேசியராகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதிரியான விளையாட்டுகளில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுவது குறைவாக இருந்தாலும் இதன் நுணுக்கங்களை அறிந்துக் கொண்டு அதில் தனித்துவம் ஆர்வம் காட்டிய ஸ்ரீஅபிராமி உலகளாவிய போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது மலேசியர்களுக்கு பெருமையான ஒன்றாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய அரசாங்கம் ஸ்ரீஅபிராமிக்கு எந்தவொரு ஆதரவையும் ஒத்துழ்ழைப்பையும் வழங்கியதில்லை என கூறிய ஸ்ரீஅபிராமியின் தந்தை திரு.சந்திரன் நடப்பு பாக்காத்தான் அரசாங்கம் நாட்டின் புகழை உயர்த்திய ஸ்ரீஅபிராமி இத்துறையில் மேலும் பல சாதனைகளை படைக்க ஆதரவு கொடுக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

அதேவேளையில்,ஆசிய ஸ்கேட்டிங் சம்பியன்ஷிப் போட்டியில் ஸ்ரீ அபிராமி வென்ற நன்கு தங்கப்பதக்கங்களையும் நாட்டின் 7வது பிரதமர் துன் மகாதீருக்கு சமர்பணம் செய்வதாகவும் அவர் கூறினார்.ஸ்ரீ அபிராமி தொடர்ந்து இத்துறையில் சாதனைகளை ஏற்படுத்தி உலகளாவிய ஒலிம்பிக் போன்ற போட்டிகளிலும் நாட்டின் பிரதிநியாக கலந்துக் கொண்டு நாட்டிற்கும் நம் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என “சிலாங்கூர் இன்று” வாழ்த்துகிறது.


Pengarang :