NATIONAL

11-வது மலேசிய பெருந்திட்டம்: நகர் மற்றும் புறநகர் மேம்பாடு இடைவெளி குறைக்கப்படும்

கோலா லம்பூர், அக்டோபர் 19:

புறநகர் மற்றும் நகரத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள மேம்பாடு இடைவெளி குறைக்கப்படும் வேளையில் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேசிய நீரோட்டத்தில் பின்தங்காமல் இருக்க முடியும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இதன் அடிப்படையில், 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு புறநகர் பகுதிகளில் சாலைகள் மேம்படுத்தப்படும் என்றார்.

”  60,000 வீடுகளுக்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், 41,160 வீடுகளுக்கு மின்சார இணைப்பு வசதிகள் செய்து தரப்படும். இணைய உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 300 தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் செயல்பாட்டில் உள்ளவைகளும் தரம் உயர்த்தப்படும்,” என்று 11-வது மலேசிய பெருந்திட்டத்தின் அரைத் தவணை ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Pengarang :