SELANGOR

சுபாங் ஜெயா நகராண்மைக்கழகம் வாகன சம்மன் கட்டணத்தை உயர்த்துகிறது

சுபாங், நவம்பர் 20:

வரும் 2019ஆம் ஆண்டு முதல் கண்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் கார்களை இழுத்து செல்லும் கட்டணத்தையும் சம்மன் கட்டணத்தையும் உயர்த்திட சுபாங் ஜெயா நகராண்மைக்கழகம் முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு முதல் இழுத்து செல்லப்படும் கார்களுக்கான கட்டணத்தை வெ.200வரையும் சம்மன் கட்டணத்தை வெ.50வரையும் உயர்த்திட அஃது முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் நொராய்னி ரோஸ்லான் தெரிவித்தார்.

உயர்த்தப்படும் அந்த கட்டணம் சிலாங்கூர் மாநிலத்தின் பிற ஊராட்சித்துறைகளோடு ஒப்பிடுகையில் குறைவானதே என்றும் தெரிவித்த அவர் இழுத்து செல்லப்படும் கார்களுக்கு எம்.பி.எஸ்.ஜெ செலவிடும் தொகை வெ.300 என்றும் இருப்பினும் அதை விட குறைவான கட்டணத்தையே எம்.பி.எஸ்.ஜெ விதிப்பதாகவும் கூறினார்.

அதேவேளையில்,பொது மக்கள் தத்தம் வாகனங்களை கார் நிறுத்தங்கள் வைப்பதே விவேகம்.போக்குவரத்திற்கு இடையூர் செய்யும் வகையில் கண்ட இடங்களில் நிறுத்தி வைத்து பின்னர் அவதிக்குள்ளாகாதீர்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


Pengarang :