SUKANKINI

துன் மகாதீர்: ஏஎப்எப் கிண்ணத்தை நாட்டிற்கு கொண்டு வாருங்கள்

கோலா லம்பூர், டிசம்பர் 15:

ஹாரிமாவ் மலாயா அணியினர் நம்பிக்கையோடு சிறந்த விளையாட்டை மையப்படுத்தி ஏஎப்எப் கிண்ணத்தை வெற்றிக் கொண்டு நாட்டிற்கு எடுத்து வர வேண்டும் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் விளையாட்டாளர்களுக்கு அறிவுறித்தினார்.

” ஹானோய், வியட்னாம் அரங்கில் நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்தில் விளையாடும் ஆட்டக்காரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாம் எதிரணியை வீழ்த்த முடியும். ‘அல்ட்ராஸ் மலாயா’ தொடர்ந்து பலமான ஆதரவை வழங்கி ஆட்டக்காரர்களுக்கு உடசாகத்தை ஏற்படுத்த வேண்டும்,” என்று அகப்பக்கத்தில் வெளியிட்ட காணோளியில் டாக்டர் மகாதீர் இவ்வாறு கூறினார்.


Pengarang :