SELANGORUncategorized @ta

மந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் இந்தியர்களுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது

பத்து கேவ்ஸ், டிசம்பர் 8:

சிலாங்கூர் மாநிலம், இந்தியர்களுக்கு குறிப்பாக கல்வி மற்றும் தொழில் முனைவர் மேம்பாடு அடைய பல்வேறு உதவிகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். 2019-ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் ரிம 3 மில்லியனை இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது என்றார்.

இந்திய தொழில் முனைவர் திட்டம் மலேசியாவில் முதல் முறையாக செயல்படுத்தியது சிலாஙாகூரில் தான் என்று சொன்னால் அது மிகையாகாது என்று பெருமையுடன் கூறினார்.

” இது மட்டும் அல்ல, ஷா ஆலாமில் அமைந்துள்ள மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் ரிம 4 மில்லியன் செலவில் மாணவர் தங்கும் விடுதி கட்டப் படவிருக்கிறது. நாம் வெறுமனே நவீன பள்ளியை கட்டவில்லை. மாறாக, பல்வேறு வசதிகளை கொண்ட பள்ளியாக இது அமையும், ” என்று சுங்கை துவா சட்ட மன்ற தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு பேசினார்.


Pengarang :