NATIONAL

புகைபிடிப்பதைத் தடுக்கும் இயக்கத்தில் பங்கேற்று வாரந்தோறும் வெ100 தட்டிச் செல்லுங்கள்

கோலா லம்பூர், ஜனவரி 2:

புகைபிடிப்பதைத் தடுக்கும் “பப்ளிக் ஹெல்த் மலேசியா” எனும் இயக்கத்தில் பங்கேற்பதன் மூலம் உணவக உரிமையாளர்கள் ஒவ்வொரு வாரமும் 100 வெள்ளியைப் பரிசாகப் பெற வாய்ப்புள்ளது.
இந்த இயக்கத்தின் முக்கிய மூன்று விதிமுறைகளைக் கடைபிடிப்பதன் வழி உணவக உரிமையாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என்று “பப்ளிக் ஹெல்த் மலேசியா” அதன் அகப்பக்கத்தில் தெரிவித்தது.

உணவக உரிமையாளர்கள் “புகைபிடிக்கத் தடை” எனும் அட்டையை சுவரில் மாட்டியிருப்பதோடு ‘ சாம்பல் தட்டுகளை அகற்றிவிட்டு வாடிக்கையாளர் எவரும் புகைபிடிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே அந்த மூன்று முக்கிய விதிமுறைகளாகும்.

இந்த மூன்று விதிகளும் கடைபிடிக்கப்பட்டவுடன் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டு உணவகத்தின் இருப்பிடத்தையும் பதிவு செய்து ‘ ரிஸ்டார்ட் நாவ்” எனும் இயக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மலேசியா முழுவதும் புகைபிடிப்பதைத் தடுக்கும் கொள்கையை அமல்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட சமூக ஊடக இயக்கமே ’ரிஸ்டார்ட் நாவ்’ ஆகும்.


Pengarang :