SELANGOR

பூர்வ குடியினரின் உரிமையைத் தற்காப்பதில் சிலாங்கூர் சிறந்த முன்னுதாரணம்!

ஜெலாய், ஜன.22:

2008ஆம் ஆண்டு முதல் பூர்வ குடிமக்களுக்கு இழப்பீட்டு தொகையாக 6.5 மில்லியன் வெள்ளியை சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வருவதானது முன்பு தேசிய முன்னணி அரசு மறுத்து வந்த பூர்வ குடிமக்களின் உரிமையை நடப்பு அரசாங்கம் மதிக்கிறது என்பதற்கான ஆதாரம் ஆகும்.

இது பூர்வ குடிமக்களின் நலனைக் காக்கும் ஆற்றல் பக்காத்தான் ஹராப்பானுக்கு உண்டு என்பதைப் புலப்படுத்துகிறது. தற்போது மத்தியிலும் இந்த கூட்டணி ஆட்சி புரிவதால் இத்தரப்பினரின் தேவைகள் இனி பூர்த்தி செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தலைவருமான அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் எம்.மனோகரன் வெற்றி பெற்றால் இந்நிலைமை மேலும் சிறப்பாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

முன்பு மத்தியில் பக்காத்தான் அரசாங்கத்தை அமைக்காத வேளையிலும், சிலாங்கூரில் பூர்வ குடிமக்கள் நடவடிக்கை அமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்பட்டு அவர்களுக்கு இழப்பீடாக 6.5 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.


Pengarang :