NATIONAL

பொது சொத்துகளைச் சேதப்படுத்தும் குற்றவாளிகள் சமூகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்!

எம்சிபிஎஃப் பரிந்துரைக்கு கேபிகேடி ஆதரவு. பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களைச் சமூகப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ லீ லாம் தாயின் பரிந்துரையை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு வரவேற்கிறது.

பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போருக்கும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவோருக்கும் ஒரு படிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் அவர்களுக்கு தண்டனை வழங்கினால், அத்தகையோர் மீண்டும் அக்குற்றங்களைப் புரிய மாட்டார்கள் என்று சில மாதங்களுக்கு முன்னர் தாம் வெளியிட்ட அறிக்கைக்கு ஏற்ப இப்பரிந்துரை அமைந்திருப்பதாக வீடமைப்பு மற்று ஊராட்சி துறை அமைச்சர் புவான் ஹாஜா சுரைடா கமாருடின் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 10 தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற்ற ஊராட்சி துறை அமலாக்கப் பிரிவின் போது பேசிய அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டார். ஊராட்சி மன்றங்களின் சேவைத் தரத்தை உயர்த்த பொது மக்கள் தெரிவித்து வரும் கருத்துகளை தாம் மதிப்பதாக அவர் சொன்னார்.

மாண்புமிகு புவான் ஹாஜா ஸூரைடா கமாரூடின்
வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர்
புத்ரா ஜெயா
ஜனவரி 2, 2019


Pengarang :