NATIONAL

மக்களுடன் நேரடி தொடர்பு, பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும்!

கோலாலம்பூர், ஜன.17:

மக்களுடன் தொடர்பை அதிகரிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை மேலோங்கச் செய்ய முடியும் என்று அரச மலேசிய போலீஸ் படை கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதன் வழி, குற்றச் செயல்களின் எண்ணிக்கையைக் குறைக்க காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க முடியும் என்று மலேசிய குற்றச் செயல் தடுப்பு அறவாரியத்தின் மூத்த துணைத் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தாய் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவும் குற்றச் செயல்கள் குறித்த செய்திகள் மக்களை அச்சமூட்டுவதால், அவர்கள் மத்தியில் அச்செய்திகள் மறைமுகமாக பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

எனவே, மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை மேலோங்கச் செய்ய, பொது மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளை அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.

மக்களின் பாதுகாப்பு உணர்வு குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்றும் வழிவகைகள் குறித்து ஆய்வு நடத்த சுயேட்சை அமைப்பை தேர்வு செய்ய எண்ணியுள்ள காவல் துறையின் நடவடிக்கையை அவர் வெகுவாகப் பாராட்டினார்.


Pengarang :