PUTRAJAYA, 19 Feb — Menteri Sumber Manusia M. Kula Segaran (dua, kiri) melancarkan Indeks Gaji Kebangsaan (National Wage Index – NWI) di Kementerian Sumber Manusia hari ini. Turut sama (dari kiri) Timbalan Ketua Setiausaha Dasar dan Antarabangsa, Datuk Kua Abun, Pengarah Institut Maklumat dan Analisis Pasaran Buruh, Wan Zulkfli Wan Setapa Timbalan Ketua Setiausaha Operasi Lim Eng Hock. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

அடிப்படை ஊதியம், ஊதிய உயர்வை நிர்ணயிக்க தேசிய ஊதிய குறியீடு அறிமுகம்

புத்ரா ஜெயா, பிப்.20:

இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊதிய குறியீடு, மலேசிய தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கும் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கும் ஒரு வழிகாட்டியாகத் திகழும்.

புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் நடப்பு ஊதிய உயர்வு கட்டமைப்பை உயர்த்துவதற்கும் 11ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள 11 திட்டங்களில் இந்த குறியீடும் ஒன்றாகும் என்று மனித வள அமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.

“உள்நாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களின் ஊதியத்தை வரையறுக்கவும் அதிகரிக்கவும் நாட்டில் முதல் முறையாக அறிமுகப்பட்டுள்ள இந்த குறியீடு ஒரு சிறந்த வழகாட்டியாக அமையும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தொழிலாளர்களும் வேலை வாய்ப்புகளைத் தேடுபவர்களும் இந்த வழிகாட்டி மூலம் நாட்டின் ஊதிய நிலவரத்தை அறிந்து கொள்ள முடியும் என்று இந்த கூறியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்திய பின்னர் பெர்னாமாவிடம் குலசேகரன் கூறினார்.


Pengarang :