SELANGOR

செமினி பால விவகாரம் : குத்தகை நிறுவனத்தின் செயல்திறனை மாநில அரசு மதிப்பிடும்!

கோலாலம்பூர், பிப்.9:

ஜாலான் பாங்கி லாமாவையும் ஜாலான் செமினியில் உள்ள கோலாலம்பூர் – சிரம்பான் சாலையயும் இணைக்கும் பாலத்தை கட்டுவதற்காக பொதுப் பணித்துறை (ஜேகேஆர்) தேர்ந்தெடுத்த குத்தகை நிறுவனம் மற்றும் குத்தகையாளரின் செயல்திறனை மாநில அரசாங்கம் மதிப்பீடு செய்யும்.

“இதன் தொடர்பில் ஜேகே ஆருடன் கலந்துரையாடியபின், அறிக்கை ஒன்று விரைவில் வெளியிடப்படும்” என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்,

“இது குறித்து ஜேகே ஆருடன் பேசியுள்ளேன், அவர்கள் ஓர் அறிக்கையை வெளியிடுவார்கள். இந்த நடவடிக்கை நடக்கவிருக்கும் செமினி இடைத்தேர்தலுக்காக மாறாக, கட்டுமானப் பணி தொடர்பான நடவடிக்கையை கண்காணிப்பதற்காகவே” என்று அவர் சொன்னார்.

இந்தத் திட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் இருப்பதை தாம் உணர்ந்துள்ளதாகவும் திட்டமிட்டபடி குத்தகையாளர் அவரது கடமையைச் செய்யாமலும் நிதி பற்றாக்குறையும் அவற்றுள் அடங்கி இருக்கலாம் என்றும் அமிருடின் விளக்கமளித்தார்.


Pengarang :