NATIONAL

வாதிடும் திறம் இல்லாத எதிர்க்கட்சி வயது குறித்து கேலி செய்வதா?

செமினி, பிப்.27-

செமினி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாக்காத்தான் வேட்பாளரின் வயது குறித்து கேலி பேசுவதைத் தவிர பிரச்சாரம் செய்வதற்கு எதிர்கட்சியினருக்கு வேறு விவகாரம் கிடைக்கவில்லை என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“பாக்காத்தான் வேட்பாளரின் வயது குறித்து கேலி பேசும் எதிர்கட்சியினர் தாங்களும் இளைஞராக இருந்தபோது மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டதை மறந்து விட்டனர்” என்றார் அவர்.

“வாதம் செய்ய இயலாமல் போனதால், நமது வேட்பாளரின் வயதை கேலி செய்கின்றனர். கேலி பேசுபவர், தனது 20-30 வயதில் மக்கள் பிரதிநிதியாகவும் மந்திரி பெசாராகவும் பணி புரிந்ததை மறந்து விட்டார் போலும்” என்று அமிருடின் சுட்டிக்காட்டினார்.

பல இளம் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ள பக்காத்தான் கூட்டணி, அவர்கள் சிறப்பாக செயல்படுவதையும் கண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :