NATIONAL

சாலைகளைப் பார்வையிடுவதற்காக 1000 கி. மீ தூரம் பஸ்ஸில் பயணம் செய்த துணையமைச்சர்

செமினி, பிப். 27:

கிழக்குக் கரை பகுதிகளில் உள்ள சாலைகளைச் சோதனையிடுவதற்காக பஸ்ஸில் பயணம் செய்ய பொதுப்பணி அமைச்சு முடிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்தும் பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் கூட அம்மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தரமான சாலைகளைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று பொதுப் பணித் துணையமைச்சர்  அனுவார் தாஹீர் கூறினார்.

“பகாங்கில் இருந்து நேராக திரெங்கானுவிற்கும் பின்னர் அங்கிருந்து கிளந்தானுவிற்கும் பஸ்ஸில் பயணம் செய்து அங்குள்ள சாலைகளின் நிலையை நாங்கள் கண்டறிவோம்” என்றார் துணையமைச்சர்.

“இந்த உலகில் கனடா, அமெரிக்கா அல்லது இங்கிலாந்து ஆகிய எந்த நாடாக இருந்தாலும் சாலைகளைச் சோதனையிடுவதற்காக மட்டுமே அமைச்சர் அல்லது துணையமைச்சர் 1000 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்திருக்க முடியாது” என்று பண்டார் ரிஞ்சிங் குடியிருப்பு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றைத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

“இதுபோன்ற வேலைகளை தேசிய முன்னணி விவேகமாகச் செய்ய வில்லை. நாங்கள் சோதனை மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டரைப் பயன்படுத்தவில்லை. ஆனால், பஸ்ஸைப் பயன்படுத்துகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :