SELANGOR

கைவிடப்பட்ட கால்நடைகள் விவகாரம்: சிலாங்கூர் திறம்பட கையாளும்

ஷா ஆலம், மார்ச் 21-

பசு மற்றும் எருமை வளர்ப்புக்குத் தேவையான கால் நடை பண்ணை ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஏற்ற நிலத்தை கண்டறிந்து மதிப்பிடுவதில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

‘ஓதாக் லெம்பிட்டிற்கு’ இடமாற்றம் கண்டுள்ள தோட்டத்தின் மேம்பாட்டுப் பணிகள் இவ்வாண்டு பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக மாநில அடிப்படை வசதி, பொது போக்குவரத்து, நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம் கூறினார்.

சுங்கை குமுட் களும்பாங்கில் 80 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஓர் இடத்தையும் சுங்கை கெர்சிக் ராசாவில் 100 ஏக்கர் நிலப்பரப்பிலான மற்றொரு பகுதியையும் அரசுடைமையாகும் பணியில் உலு சிலாங்கூர் நில மற்றும் மாவட்ட அலுவலகம் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னார்.

சபாக் பெர்ணம் நில மற்றும் மாவட்ட அலுவலகமும் சம்பந்தப்பட்ட நிலப் பகுதி கால் நடை வளர்ப்புக்கு ஏற்றவையாக இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக இஸாம் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.


Pengarang :