SELANGOR

சிலாங்கூர் கூ விடுகளை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை!

ஷா ஆலம், மார்ச் 22-

மூன்றாம் தரப்பிடம் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடும் சிலாங்கூர் கூ வீட்டு உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்பிஎச்எஸ் சட்டத்தின் 38ஆவது பிரிவின் கீழ் காரணம் கோரும் கடிதங்களை சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை வாரியம் ( எல்பிஎச்எஸ்) அனுப்பும் என்று வீடமைப்பு மற்றும் நகர வாழ்க்கை துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹனிஸா தால்ஹா கூறினார்.

மேலும், இந்த நபர்கள் மீது குற்றவியல் 5 எல்பிஎச்எஸ் 74 சட்டத்தின் 420 பிரிவின் கூழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் எல்பிஎச்எஸ் ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார்.

“மற்றவர்களிடம் வீடுகளை வாடகைக்கு விடும் நடவடிக்கைக்கு மூல காரணம் என்ன என்பதையும் எல்பிஎச்எஸ் கண்டறிந்து வருகிறது. மேலும், சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளை வாங்குவோருக்கு சொந்தமாக வேறு வீடுகள் இல்லையென்று உறுதியளிக்கும் சத்திய பிரமான அறிக்கையில் கையெழுத்திடச் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்று ஹனிஸா தெரிவித்தார்.


Pengarang :