SELANGOR

துர்நாற்றம் வீசிய சட்டவிரோத தொழிசாலை சீல் வைக்கப்பட்டது!

கிள்ளான், மார்ச் 27-

பூலாவ் இண்டாவில் சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருந்த கோழி இறகுகள் தொழிற்சாலையில் கிள்ளான் நகராண்மைக் கழக (எம்பிகே) அமலாக்க அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கையின் போது ஊடகவியலாளர்களும் உடன் சென்றனர். அப்போது அந்தத் தொழிற்சாலையில் வீசிய துர்நாற்றம் சோதனையில் ஈடுபட்டவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தியுள்ளது.

தொழிற்சாலையின் நுழைவாயிலில் கோழி இறகுகள் குவிக்கப்பட்டும் தரையெங்கும் கோழியின் ரத்தம் சிந்தியும் இருந்த கோலத்தைக் கண்டு அமலாக்க அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். மேலும் அந்தத் தொழிற்சாலையில் வீசிய துர்நாற்றம் 500 மீட்டர் சுற்றளவிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

துர்நாற்றம் காரணமாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு குமட்டலும் வாந்தியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்பகுதியில் வீசிய துர்நாற்றத்தை நுகர நேர்ந்ததைத் தொடர்ந்து எம்பிகே தலைவர் முகமது யாசிட் பீடின் தலைமையில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.


Pengarang :