NATIONAL

தவறான தகவல்களே தடுப்பூசி மீதான அவநம்பிக்கைக்கு காரணம்

 

கடிகார முள் 7.30 காட்டிய வேளையிலேயே அரசாங்கம் வழங்கும் மருத்துவச் சேவையைப் பெறுவதற்கு ஆயர் கெரோ கிளினிக்கில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் காத்திருந்தனர்.
காய்ச்சல் கண்டுள்ள ஏழு வயது மகனை அரவணைத்தபடி அமர்ந்திருந்த என் கண்களில் எனதருகே அமர்ந்திருந்த ஓர் இளம் தாய் தென்பட்டார்.

சற்று படபடப்புடன் காணப்பட்ட அவரிடம் பேச்சு கொடுத்தபோது, தனது ஏழு மாதக் குழந்தைக்கு தடுப்பூசி போட மிகவும் தயக்கத்தோடு வந்திருப்பதாக அவர் சொன்னார்.

மகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவர் 2ஆவது மாதத்திலேயே அறிவுறுத்திய போதும் அந்தத் தடுப்பூசியில் ஆபத்தான அதே வேளையில் ‘ ஹராமான’ பொருள் கலக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் மகளுக்கு மரணம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் தான் அப்போது மருத்துவமனைக்கு வரவில்லை என்றும் அப்பெண்மணி கூறினார்.

தவறான பிரச்சாரங்களால், பொது மக்களில் பலர் தடுப்பூசி பற்றி மிகவும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுவதிலும் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் அந்த உரையாடலின் போது நான் புரிந்து கொண்டேன்.

அந்த இளம் தாய்க்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கத்தில் நான் எனது பிள்ளைக்கு அட்டவணையில் குறிப்பிட்ட காலத்திலேயே தடுப்பூசி போட்ட விபரத்தை எடுத்துரைத்தேன்.


Pengarang :