SELANGOR

90 சட்டவிரோத நெகிழி மறுசுழற்சி தொழிற்சாலைகள் மூடப்பட்டன

ஷா ஆலம், ஏப்.30-

இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி வரையில், சிலாங்கூரில் மொத்தம் 90 சட்டவிரோத நெகிழி மறுசுழற்சி தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அவற்றில் ஏழு தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் 63 விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டதாக சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் மற்றும் பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லொய் சியான் கூறினார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கு எதிராக 439,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்தக் குற்றத்திற்கு கூடிய பட்ச தண்டனையாக 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம் என்றும் சம்பந்தப்பட்ட சட்டவிரோத தொழிற்சாலை நிறுவனங்களுக்கு அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் ஹீ தெரிவித்தார்.

தொழிற்சாலைகள் மூடப்பட்ட பின்னர் அவற்றை பராமரிக்க பல மில்லியன் வெள்ளி தேவைப்படும் என்பதால் நடப்பில் உள்ள சட்டத்தில் கூட்டரசு அரசாங்கம் திருத்தம் செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்தார். .

 


Pengarang :