AppleMark
NATIONAL

டாக்சி ஓட்டுநர்கள் நலனை அரசு புறக்கணிக்கவில்லை

கோலாலம்பூர், மே 27-

டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை பக்காத்தான் அரசாங்கம் ஒரு போதும் புறக்கணிக்காது. மாறாக, முந்தைய அரசாங்கம் அளித்து வந்த உதவிகளுக்கு எந்த வகையிலும் குறையாத உதவிகளை நடப்பு அரசாங்கம் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும், அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை ஏதேனும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பாதகமாகத் தோன்றினால், அதற்கு ஒரு தெளிவான தீர்வு காணப்படும் என்று போக்குவரத்து துறை துணை அமைச்சர் டத்தோ கமாருடின் ஜாஃபார் தெரிவித்தார்.
“இணையம் சார்ந்த போக்குவரத்து சேவையை அரசாங்கம் ஊக்குவித்த போதிலும், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் நலனை நாங்கள் ஒரு போதும் புறக்கணிக்க மாட்டோம்” என்று அவர் உறுதியளித்தார்.

அதே வேளையில், இணையம் சார்ந்த போக்குவரத்து சேவையை கிராப் வழங்கி வருவதால் மக்கள் பெரிதும் பலனடைந்து வருகின்றனர் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. மக்களுக்கு இந்தச் சேவை மிகவும் எளிதான முறையில் சென்றடைகிறது என்று இங்கு நடைபெற்ற ரமலான் மாத சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ கமாருடின் கூறினார்.


Pengarang :