SELANGOR

தாமான் ஆயர் மானிஸ் திட்டம் : செல்கெட் விவாதிக்கிறது

ஷா ஆலம், மே 7-

சபாக் பெர்ணம், பஞ்சாங் பெடெனா தாமான் ஆயர் மானிஸ் வீடமைப்புத் திட்டம் மீதான பொது மக்களின் கருத்துகளை விவாதிக்க செல்கெட் எனும் போட்டியாற்றல், நம்பிக்கை மற்றும் வெளிப்படை தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு இன்று கூடுகிறது.

மாநில செயலகத்தின் நடவடிக்கை அறையில் நடைபெறும் இக்கூட்டத்தில் செல்கெட் தலைவர் இங் சுவீ லிம், புக்கிட் லன்ஞான் சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங், உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் சாரி சுங்கிப், பந்திங் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான், பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின், சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர் ரிஸாம் இஸ்மாயில் மற்றும் சிஜங்காங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அழைக்கப்பட்ட சாட்சிகளில் புகார்தாரரும் சபாக் பெர்ணம் சட்டமன்ற உறுப்பினருமான அகமது முஸ்தாயின், சபாக் பெர்ணம் மாவட்ட மன்ற தலைவர் முகமது ஃபைசால் ஃபித் ரி, காசா ஆர்கிடெக் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ டாக்டர் கமால் அப்துல்லா மற்றும் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை வாரியத்தின் நிர்வாக இயக்குனர் நஸ்மி ஓஸ்மான் ஆகியோரும் அடங்குவர்.

இவர்களைத் தவிர்த்து, கிள்ளான் மாவட்ட சொத்துடமை மதிப்பீடு மற்றும் சேவை பிரிவின் சொத்துடமை மதிப்பீட்டாளர் ஃபாஸியா அப்துல் ரசிட், சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ராஜா ஷாரீன் ராஜா ஒஸ்மான் ஆகியோரும் விளக்கமளிக்க அழைக்கப்பட்டனர்.


Pengarang :