SELANGOR

தூய்மைக்கேடான உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்

பெட்டாலிங் ஜெயா, மே 30-

தூய்மைக்கேடு காரணமாக 2007ஆம் ஆண்டு எம்பிபிஜே உணவக உரிம சட்டத்தின் 62ஆவது துணை சட்டத்தின் கீழ் மூடும்படி உத்தரவிடப்பட்ட உணவகங்கள் மீண்டும் செயல்படுவதற்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் புதிய நடைமுறைகளை எம்பிபிஜே அமல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட உணவகம் மூன்று முறை மூடும் உத்தரவைப் பெற்றதற்கான காரணம் கோரும் கடிதம் வெளியிடப்படுவதும் புதிய நடைமுறைகளில் ஒன்றாக இருக்கும் என்று டத்தோ பண்டார் டத்தோ முக்மது சாயுத்தி பக்கார் கூறினார்.

“காரணம் கோரும் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுத மறுக்கும் அல்லது எம்பிபிஜே நிராகரிக்கும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்” என்றார் அவர்.
மூன்றாவது தடவையாக மூடும் உத்தரவைப் பெறும் உணவகங்கள், 14 நாட்களுக்கு பின்னர் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :