NATIONAL

பாக்காத்தான் அரசாங்கம் புதிய பொருளாதார திட்டத்தை வரைய வேண்டும்

கோம்பாக், மே 10:

நாட்டின் எதிர் காலத்தில் ஏற்படும் பொருளாதார மாற்றத்தை  கருத்தில் கொண்டு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி ஒரு புதிய பொருளாதாரக் கொள்கையை வகுக்க வேண்டும் என்று மலேசிய தேசிய பல்கலைக் கழக (யூகேஎம்) பொருளாதார நிபுணர் டான் ஸ்ரீ முனைவர் நூர் ஹாஸ்லான் கஸாலி கூறினார். இதை செயல்படுத்த குறைவான கால அவகாசம் தேவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” இதற்கு முன்பு இருந்த தேசிய முன்னணி இது போன்ற கொள்கையை பின்பற்றியது, ஆனால் அது சிறந்த ஒன்றல்ல. தற்போதைய அரசாங்கம் இன்னும் புதிய பொருளாதார  செயல்திட்டம் ஒன்றை கொண்டிருக்கவில்லை. இருந்தாலும், கூடிய விரைவில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் செயல்படுத்தும்,” என்று அனைத்துலக மலேசிய இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற “14-வது பொதுத் தேர்தல் மற்றும் ஓராண்டு ஆட்சி”: ஆய்வு மற்றும் கண்ணோட்டம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட போது தமது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் யூகேஎம்மின் இணை வேந்தருமான நூர் ஹாஸ்லான் மேலும் கூறுகையில், தற்கால பொருளாதார வளர்ச்சியை பாதிக்காத வண்ணம் புதிய கொள்கைகள் இருக்க வேண்டும் என்பதே    பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் எதிர் நோக்கும் பெரிய சவாலாக தாம் கருதுவதாக தெரிவித்தார் .

” பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக  நிறைவேற்றினால் பொருளாதாரம் மோசமடைந்து விடும். எடுத்துக்காட்டாக, இலவச கல்வியை மக்களுக்காக கொடுத்தால், யார் கல்வி சம்பந்தமான  வரியை கட்டுவது. தோல் கட்டணத்தை நீக்கம் செய்யப்பட்டால் யாராவது ஒரு தரப்பினர் வரியை செலுத்தியே ஆக வேண்டும். ஆகவே, கால அவகாசம் தேவை, புதிய செயல்திட்டம் இலக்கை அடைய சிந்திக்க வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :