莎阿南市政厅
SELANGOR

ரமலான் மாதத்தில் சம்மன்களுக்கு 50 % கழிவு – எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், மே 24-

ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் சம்மன்களுக்கு ரமலான் மாதம் முழுமையிலும் 50 விழுக்காடு கழிவு வழங்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இம்மாதம் 6 ஆம் தேதி தொடங்கிய இந்தச் சலுகை ஜூன் மாதம் 4ஆம் தேதி வரை தொடரும் என்றும் இந்தச் சலுகை காலத்திற்குப் பின்னர் எடுக்கப்படவிருக்கும் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுவதைத் தவிர்க்க சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் அபராதங்களை விரைவாகச் செலுத்த வேண்டும் என்றும் மன்றத்தின் நிறுவன மற்றும் பொதுத் தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது நினைவுறுத்தினார்.

1983 ஆம் ஆண்டு முடிதிருத்தும் சட்டம், 2005 ஆம் ஆண்டு எம்பி எஸ் ஏ பூங்கா சட்டம், 2005 ஆம் ஆண்டு பொது சொத்து நாச சட்டம், 2007ஆம் ஆண்டு உணவக சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டு உணவக உரிமையாளர் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்ட சம்மன்களுக்கு இந்த 50 விழுக்காடு கழிவு சலுகை வழங்கப்படுகிறது என்றார் அவர்.

2007ஆம் ஆண்டு எம்பி எஸ் ஏ விளம்பர சட்டம், 2007ஆம் ஆண்டு அங்காடி கடை சட்டம், 2007ஆம் ஆண்டு எம்பி எஸ் ஏ சாலை போக்குவரத்து சட்டம் மற்றும் 2007ஆம் ஆண்டு எம்பி எஸ் ஏ சந்தை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்மன்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :