SELANGOR

கட்டடங்களுக்கான சிறு சீரமைப்பு பணிகளுக்கு இனி அனுமதி தேவை – எம்பிஎஸ்ஜே

ஷா ஆலம், ஜூலை 1-

ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட கட்டடங்களில் மேற்கொள்ளப்படும் சிறிய அளவிலான மாற்றி அமைக்கும் பணிகளுக்கு இனி அனுமதி தேவை என சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் அறிவித்தது.

குடியிருப்பு, வர்த்தக மற்றும் தொழில்துறை ஆகிய அனைத்து வகையான கட்டடங்களையும் உட்படுத்தும் இந்த பெர்மிட் நடவடிக்கையானது திடக் கழிவு நிர்வாகத்தை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது என்று எம்பிஎஸ்ஜே தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

தரை அல்லது சுவர்களை சீரமைக்கும் பணிகள், ‘கிரில்’ கதவு அல்லது ஜன்னல் பொருத்துவது, சமையலறை அடுக்குகள், கழிவறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவை சிறிய மாற்றி அமைக்கும் பணிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
மேலும் 0.5 மீட்டருக்கு மேற்போகாத ஆழத்தைக் கொண்ட மீன் தொட்டி, ஒரு மீட்டர் சதுரடிக்கு மேற்போகாத விலங்குகளுக்கான இல்லங்கள், வழிபாட்டு தலம் மற்றும் கட்டடத்தின் வழிவமைப்பை மாற்றாத பணிகள் யாவும் இந்த பெர்மீட் திட்டத்தில் உட்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :