SELANGOR

கோஸ்ட் ஸ்மோக்’ மிட்டாய் விற்பனைக்கு தடை!

ஷா ஆலம், ஜூலை 24-

‘கோஸ்ட் ஸ்மோக்’ எனும் மிட்டாய் விற்பனையை நிறுத்தக் கோரும் அரசாங்கத்தின் நடவடிக்கையை சுகாதாரம், சமூகநலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாஹ்முட் வரவேற்றார்.

அதே வேளையில், எதிர்பாராத சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிள்ளைகளைக் கண்காணிக்கும் பொறுப்பை பள்ளி தரப்பிடமும் காவல் துறையிடமும் பெற்றோர்கள் விட்டுவிடக் கூடாது. பிள்ளைகள் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க அவர்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.

“ஒரு வெள்ளிக்கு விற்கப்படும் இந்த மிட்டாய் வகை, வாயில் போட்டு உறிஞ்சியதும் புகையை வெளியேற்றுகிறது. இது பின்னர் பிள்ளைகள் சிகரெட்டுகளைப் புகைக்கும் பழக்கத்தில் ஈடுபட வழிவகுக்கும் என்பதால் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.


Pengarang :