SELANGOR

தோயோத்தா 50ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்: சிலாங்கூர் ஆட்சியாளர் வருகை புரிந்தார்

கிள்ளான், ஜூலை 10:

மாட்சிமை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷாராஃபுடின் இட் ரிஸ் ஷாவும் அவர்தம் துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகினும் புக்கிட் ராஜா, ஏஎஸ்எஸ்பி 2ஆவது தொழிற்சாலையில் நடைபெற்ற தோயோத்தா மலேசியாவின் 50 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு வருகை புரிந்தனர்.

மாநில ஆட்சியாளர் இக்கொண்டாட்டத்தின் அதிகாரப்பூர்வ தகட்டில் கையொப்பமிட்டார். அச்சமயம் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, மலேசியாவிற்கான ஜப்பானிய தூதர் டாக்டர் மாகியோ மியாகாவா, தோயோத்தா மோட்டோர் சீனா மற்றும் தென் கிழக்காசியாவிற்கான தலைமை செயல்முறை அதிகாரி தத்சூரோ உயேடா மற்றும் யுஎம்டபள்யூ குழுமத்தின் நிர்வாகி டான்ஸ்ரீ ஹமாட் பியா சே ஓஸ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கிய ஏஎஸ்எஸ்பி 2 தொழிற்சாலையில் தோயோத்தாவின் ஆகப் புதிய தயாரிப்பான வியோஸ் மாற்றும் யாரிஸ் கார்கள் தயாரிக்கப்படுவதை வந்திருந்த பிரமுகர்கள் அனைவரும் பார்வையிட்டனர்.

இதே நிகழ்வில், சிலாங்கூர் இளைஞர் சமூகத்திற்கு (சேய்) யுஎம்டபள்யூ தோயோத்தோ மோட்டோர்ஸ் நிறுவனம் தோயோத்தா யாரிஸ் வாகனத்தை அன்பளிப்பாக வழங்கியது.


Pengarang :