SELANGOR

விண்வெளித் துறைக்கு தேவையான நிலங்கள் சிறந்த தீர்வு கிடைக்கும் – மந்திரி பெசார் நம்பிக்கை

ஷா ஆலம், ஜூலை 2-

விண்வெளித் துறைக்கு தேவையான இடங்களைத் தயார் செய்வது குறித்து கஸானா நேஷனல் பெர்ஹாட் மற்றும் மலேசிய ஏர்போர்ட் ஹோடிங்ஸ் பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களுடன் சிலாங்கூர் மாநில அரசாங்கம் விவாதித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

“பொதுவாகவே சிலாங்கூரில் உள்ள நிலங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும் ஆனால் முதலீட்டாளரின் தேவையோ அதிகம்” என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
“இந்தத் துறைக்கு அதிக நிலம் தேவைப்படுவதால், அவர்களுடைய பல்வேறு பரிந்துரைகளை பரிசீலித்து வருகிறோம். அதே வேளையில், அவர்கள் இணக்கம் தெரிவித்தால் நமது புதிய பரிந்துரையையும் அவர்களிடம் நாங்கள் சமர்ப்பிக்க உள்ளோம்” என்றார் அவர்.

இந்த முயற்சி வெற்றியடைந்தால், தென்கிழக்காசியாவில் இத்தகைய சேவையை வழங்கும் நாடாக மலேசியா திகழும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இது ஒரு மிகப் பெரிய முதலீடு என்பதால், இரு தரப்பிற்கும் சாதகமான சூழ்நிலை இருப்பதை உறுதி செய்வதோடு இந்தத் துறையில் ஏற்படக் கூடிய வேலை வாய்ப்புகள் மலேசியர்களுக்கு கிடைப்பதும் உறுதி செய்யப்படும்” என்றார் அவர்.


Pengarang :