NATIONAL

ஹாஸிக்கை நீக்கியது நியாயமான நடவடிக்கையே!

கோத்தாபாரு, ஜூலை 5-

பிகேஆர் கட்சியின் செந்தூபோங் கிளை இளைஞர் அணி தலைவர் ஹாஸிக் அப்துல்லாவை கட்சியில் இருந்து நீக்கியது நியாயமான நடவடிக்கையே என்று பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் டத்தோஸ்ரீ சம்சுல் இஸ்கந்தர் முகமது அகின் கூறினார்.
கட்சியின் தலைவர் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்தியதோடு அவரை பாலியல் காணொளியோடு தொடர்புபடுத்தியது ஹாஸிக்கை கட்சியை விட்டு நீக்கியதற்கு முக்கிய காரணமாகும் என்றார் அவர்.

“கட்சி தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு கட்சியின் தலைமைத்துவத்திற்கு தொடர்பில்லாதது. மேலும் அது ஓர் அடிப்படையற்ற குற்றச்சாட்டு . இதுவே ஹாஸிக்கை கட்சியை விட்டுக் நீக்குவதற்கு போதுமான காரணம்” என்றார்.

“கட்சி விவகாரத்தை கட்சி மட்டத்தில் தீர்வு காண வேண்டுமென்பதே நமது கொள்கையாகும். எனவே, இந்த விவகாரத்தில் ஹாஸிக் செய்த தவறை நியாயப்படுத்துவதற்கு வலுவான அடிப்படை காரணங்கள் இல்லை. தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது” என்றார் சம்சுல்.


Pengarang :