KUALA LUMPUR, 21 Mac — Menteri Hal Ehwal Ekonomi Datuk Seri Mohamed Azmin Ali menjawab pertanyaan media pada persidangan Parlimen di Bangunan Parlimen hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

12ஆவது மலேசிய திட்டம் : மூன்று அம்சங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது

புத்ராஜெயா, ஜூலை 1-

பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், சுற்றுச் சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக மறு சீரமைப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் 12ஆவது மலேசிய திட்டத்தின் கொள்கைகள் மற்றும் வியூகங்கள் மாற்றியமைக்கப்படும்.
12ஆவது மலேசிய திட்டமானது கடந்த கால திட்டங்களின் தொடர்ச்சியாக இருக்கும் அதேவேளையில், நீண்ட கால மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒன்றிணைந்து மேம்படுவோம் என்ற கோட்பாடு ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

“அந்த மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்கள் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டை நீடித்த மேம்பாடடைந்த நாடாக உருமாற்றும் அரசாங்கத்தின் இலக்கிற்கு ஏற்ப அமைந்திருக்கும்” என்றார் அவர்.

இந்த அம்சங்களுக்கு அரசாங்கத்தின் புதிய கொள்கைகளும் அவற்றின் அமலாக்கமும் உறுதுணையாக இருக்கும் என்று 12ஆவது மலேசிய திட்டத்தைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் அஸ்மின் அலி கூறினார்.


Pengarang :