NATIONAL

இனரீதியான பிரச்சினைகளை ஒரு சில தரப்பினர் எழுப்பி வருகின்றனர்

ஷா ஆலம், ஆகஸ்ட் 26:

இனரீதியான பிரச்சினைகளை எழுப்பி வரும் தரப்பினரால் நிலைமை மோசமாகி வருவதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் அப்துல் சாமாட் கூறினார். அரசாங்க நிர்வாகத்தை குறைகூறவே வேண்டும் என்று இனத்துவாத சித்தாந்தத்தை பரப்பி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

” அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தற்போது பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் எதிர்நோக்கும் இனரீதியான பிரச்சினைகள் நாட்டின் சரித்திரத்திலே மிகவும் மோசமான ஒன்று. இது ஒரு சில தரப்பினரால்  திட்டமிட்டு  செய்யப் பட்டது. எதிர்க் கட்சிகள் வேண்டும் என்றே இனத்துவாத பிரச்சினைகளை கிளப்பி வருகின்றனர். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கத்தை குறைகூறவே சமூக வலைதளங்களில் இனரீதியான பிரச்சினைகளை எழுப்பிய பரப்பி வருகின்றனர்,” என்று ஷா ஆலம் செக்சன் 9 தேசிய இடைநிலைப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் காலிட் சாமாட் பேசினார் .


Pengarang :