SELANGOR

ரிம 192,300 மதிப்பிலான பேருந்து கட்டணத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கியது

ஷா ஆலம், ஆகஸ்ட் 26:

சிலாங்கூர் மாநில அளவில் 10 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளில், 641 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரிம 192,300 மதிப்பிலான பள்ளி பேருந்து கட்டணத்தை மாநில அரசாங்கம் வழங்கியது என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் தெரிவித்தார். இந்த நிதி உதவிகள் நாளை தொடங்கி வியாழக்கிழமை வரை பகிர்ந்து அளிக்கப் படுகிறது என்று அவர் விவரித்தார்.

” பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் நிர்வாகத்தில் இயங்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயல்படும். இனம் மற்றும் மதம் ஆகியவற்றை தாண்டி அனைவரும் பலன் பெறுவதை மாநில அரசாங்கம் உறுதி செய்யும். இவ்வேளையில் இந்திய சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்ட மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி பேருந்து கட்டண உதவி நிதி பெற்றோர்களின் பணச் சுமையை குறைக்க முடியும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

சுல்தான் சலாஹூடின் அப்துல் அஸீஸ் ஷா கட்டிடத்தில் நடைபெற்ற இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தளங்களின் 5-ஆம் கட்ட நிதி உதவி மற்றும் பொது பல்கலைக் கழகம் அல்லது தனியார் பல்கலைக் கழகங்களுக்கான 6-ஆம் கட்ட நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் பேட்டியளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

பேருந்து கட்டணம் வழங்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள்

1. சுங்கை மங்கீஸ் தமிழ்ப்பள்ளி – 96

2. சிம்பாங் மொரீப் தமிழ்ப்பள்ளி – 61

3. சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி – 91

4. நோர்த் ஹாம்ஹோக் தமிழ்ப்பள்ளி – 47

5. வலம்புரசா தமிழ்ப்பள்ளி – 81

6. செமினி தமிழ்ப்பள்ளி – 41

7. கோல்ட்பீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி – 50

8. சுங்கை ரம்பாய் தோட்டத் தமிழ்ப்பள்ளி – 47

9. சுங்கை பெர்னாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி -35

10. சபாக் பெர்னாம் தமிழ்ப்பள்ளி – 92


Pengarang :