KUALA LUMPUR, 16 Ogos — Penceramah bebas Dr Zakir Naik (kanan) dilihat keluar dari Ibu Pejabat Polis Diraja Malaysia (PDRM) Bukit Aman malam ini dengan menaiki kenderaan setelah memberi keterangan kepada polis bagi membantu siasatan di bawah Seksyen 504 Kanun Keseksaan kerana menghina dan menggugat ketenteraman awam. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

ஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தை அமைச்சரவை முடிவு செய்யும்

ஜோகூர் பாரு , ஆகஸ்ட் 18:

அந்நிய நாட்டு சமய போதகர் ஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமையை மீட்டுக் கொள்ளும் முழு உரிமை அமைச்சரவைக்கு மட்டுமே உள்ளது என்று வெளியுறவு துணை அமைச்சர் டத்தோ மார்ஸூக்கி யாய்யா கூறினார். சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகீர் இந்தியர்கள் மற்றும் சீனர்களை குறித்து தமது சமய பிரச்சாரத்தில் பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

” ஸாகீர் நாயக்கை பற்றி நான் கருத்துரைக்க தேவையில்லை ஏனெனில் அவர் மலேசிய பிரஜை அல்ல. ஆகவே, மலேசியர்களிடையே அவரை தொடர்பு படுத்தி சச்சரவு போடுவது வீண் வேலை. அமைச்சரவை ஸாகீர் நாயக்கின் நிரந்தர குடியுரிமை விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கும்,”  என்று ஜோகூர் மாநில பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.


Pengarang :