PEKAN, 25 Sept — Generasi kedua Felda Chini 3, Hasjikiman Othman, 35, bersama sebahagian lembu ternakannya semasa ditemui baru-baru ini. Beliau mula membela ternakan dalam ladang kelapa sawit sejak lima tahun lepas dan setakat ini mempunyai 85 ekor lembu selain 20 ekor kambing. Bergelumang dengan bau lembu dan kambing dilihat sebagai pekerjaan tidak glamour, namun jika diusahakan dengan bersungguh-sungguh boleh mendatangkan pulangan lumayan. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA

நல்ல வருவாய் தரும் கால்நடை வளர்ப்பு

பெக்கான், செப்.27-

ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் வளர்ப்பு என்பது துர்நாற்றமிக்க சூழலில் அமைந்த வேலை என்று நம்மில் சிலர் கருதும் வேளையில், அத்துறையில் சிரத்தையுடன் உழைத்தால் நல்ல வருமானத்தை அளிக்கும் ஒரு துறை என்பதே உண்மையாகும்.

பெல்டா திட்டத்தின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த ஹாஸ்ஜிகிமான் ஒஸ்மான் ( வயது 35) என்பவர் தனது செம்பனை தோட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய கால்நடை பண்ணையில் தற்போது 85 மாடுகள் மற்றும் 20 ஆடுகள் வளர்கின்றன.
முன்பு விளையாட்டு போக்காகத் தொடங்கிய இந்த கால்நடை வளர்ப்பானது செம்பனை பொருட்களின் விலை சரிவடைந்துள்ள காலத்தில் பெரும் உதவியாக உள்ளது என்று மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான ஹாஸ்ஜிகிமான் கூறினார்.

“ஒவ்வொரு மாதமும் கிலோ ஒன்று 22 வெள்ளி என்ற விலை இரு மாடுகள் விற்பனையாகும் வேளையில் கடந்த ஹஜ்ஜுப் பெருநாள் நேரத்தில் 3,800 வெள்ளிக்கு எட்டு மாடுகள் விலைபோயின” என்றார் அவர்.


Pengarang :