NATIONALSELANGOR

மந்திரி பெசார்: மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளுங்கள்; சந்தர்ப்பவாத அரசியல் செய்யாதீர்கள் !!!

ஷா ஆலம் , செப்டம்பர் 19:

பாயா ஜெராஸ் சுங்கை கெடோன்டோங் வெள்ளத் தடுப்பு திட்டத்தை அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் அடையும் நோக்கில் செயல்படும் நபர்களை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி சாடினார்.

1000-க்கும் மேற்பட்ட நான்கு கிராமங்களை சேர்ந்த பொது மக்களின் சிரமங்களை சிந்திக்காமல் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சிலரின் நடவடிக்கை கேவலமான செயல் என்று அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

” சிலாங்கூர் கூ வீடுகள் கொடுத்து விட்டோம். வீடு குடிபோகும் செலவுத் தொகை கணக்கெடுப்பு செய்து விட்டோம். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, ஆனால் தற்போது சந்தர்ப்பவாத சக்திகள் ஊடுருவி விட்டது. ஆகவே, நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். அரசியல் சித்து விளையாட்டுகளை ஆரம்பியுங்கள். வெள்ளம் ஏற்பட்டு பல சிரமங்களை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பிரச்சினைகளை உருவாக்க வேண்டும் என்று பெரிய தலைவர்களை வரவழைத்து உள்ளனர். இதற்கு முன்பாக பாயா ஜெராஸ் சட்ட மன்ற உறுப்பினர் கைருடின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதாக அவரே கூறியிருக்கிறார்,” என்று அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார்.

மகளிர் தலைமைத்துவ மையத்தை அதிகாரப் பூர்வமாக திறந்து வைத்து பேசும் போது இவ்வாறு அமிரூடின் ஷாரி பேசினார்.


Pengarang :