NEW YORK, Sept 25 — Prime Minister Tun Dr Mahathir Mohamad speaking at the World Leaders Forum held at Columbia University on Wednesday. Mahathir is in town for the 74th Session of the United Nations General Assembly. –fotoBERNAMA (2019) COPYRIGHTS RESERVED
ANTARABANGSANATIONALRENCANA PILIHAN

வல்லரசு நாடுகளின் செயலால் மற்ற நாடுகளுக்கு மிரட்டல்! -துன் மகாதீர்

நியூயார்க், செப்டம்பர் 30:

வல்லரசு நாடுகள் தங்கள் சொந்த விருப்பப்படி செயல்பட நினைப்பதே ஒருங்கிணைந்து முடிவெடுக்க எண்ணும் நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது என்று மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடு மற்ற நாடுகளைப் பற்றியோ அல்லது அவர்களின் உணர்வுகளைப் பற்றியோ சற்றும் சிந்தித்துப் பார்க்காது என்றார் மகாதீர்.
“எனினும், மன வலிமை காரணமாக இவர்கள் எதனையும் சுயமாகவே செய்கின்றனர். தங்களின் செயலால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதகங்களை இவர்கள் சற்றும் பொருட்படுத்துவதில்லை” என்று இங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உலக தலைவர்களுக்கான ஐ.நாவின் 74 ஆவது பொதுப் பேரவையில் உரை நிகழ்த்துகையில் மகாதீர் குறிப்பிட்டார்.

எந்த விவகாரத்திற்கும் பேச்சு வார்த்தை, பரிசீலனை மற்றும் நீதிமன்ற நடவடிக்கை போன்றவற்றின் வாயிலாக தீர்வு காண முடியும் என்ற மலேசியாவின் திடமான நம்பிக்கையே பல்வேறு தரப்புகளின் கருத்துகளைப் பெறுவதில் இந்நாடு வெற்றி பெற்றிருக்கிறது என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.


Pengarang :