NATIONAL

1எம்டிபி ஊழல் விசாரணை: தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கூட்ட அறிக்கையை நஜிப் வெளியேற்றினார்!

கோலாலம்பூர், செப்.25-

1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக பங்குதாரர் கூட்ட அறிக்கையை டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வேண்டுமென்றே வெளியேற்றியதாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி ஒருவர் நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜோ லோ என்றழைக்கப்படும் தேடப்படும் வர்த்தகரான லோவ் தெக் ஜோவின் ஆலோசனையின் பேரில் அந்த கூட்ட அறிக்கையில் முன்னாள் பிரதமர் கையெழுத்திட்டார் என தாம் நம்புவதாக முன்னாள் திரெங்கானு முதலீட்டு நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோ ஷாரோல் அஸ்ரால் இப்ராஹிம் ஹால்மியின் ( 49) எழுத்துப்பூர்வமாக அளித்த சாட்சியம் வாசிக்கப்பட்டது.

5
1எம்டிபி மீதான ஊழல் விசாரணைக்கு பின்னரே, தன்னை இக்குற்றச்சாட்டுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் பழியை வாரியம் மீது சுமத்தும் நோக்கத்திலும் கடந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதியிட்ட பங்குதாரர் கூட்ட அறிக்கையை நஜிப் துன் ரசாக் வெளியே எடுத்துள்ளார் என்பது தமக்கு தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

ஏனெனில், அந்த கூட்டத்திற்கு இரு நாட்களுக்கு பின்னர் நடைபெற்ற வாரிய இயக்குநர் கூட்டத்தில் துருக்கி இளவரசருக்கு சொந்தமான பெட்ரோ சவூதி நிறுவனத்தின் துணையோடு புதிய திட்டம் ஒன்றில் ஈடுபடுவதற்காக ஐஎம்டிஎன் உத்தரவாத நிதியை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் ஷாரோல் தெரிவித்தார்.


Pengarang :