Dato’ Haris Kasim (tiga, kanan) bersama Pengurus Hal Ehwal Korporat F&N (tengah) melawat ke ruangan pameran ketika Majlis Penutupan Kempen Kitar Semula Peringkat Sekolah MBSA 2019 di Dewan Banquet MBSA, Shah Alam pada 2 Oktober 2019. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
PBTSELANGOR

இளைய தலைமுறையினர் மத்தியில் மறுசுழற்சி விழிப்புணர்வு

ஷா ஆலம், அக்.2-

பொது மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மறுசுழற்சி குறித்த விழுப்புணர்வை ஊக்குவிக்க பள்ளி நிலையிலான மறு சுழற்சி இயக்கத்தை ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் ஏர்பாடு செய்துள்ளது.

13-ஆவது முறையாக மேற்கொள்ளப்படும் இவ்வியக்கம் அடுத்த தலைமுறையினருக்காக சுற்றுச் சூழலைப் பேணும் பொறுப்பு குறித்த விழுப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஹாரிஸ் காசிம் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வியக்கம் 2007ஆம் ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை தொடர்ந்து ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கி வரும் ஃபிரேசர் அண்ட் நீவ் நிறுவனத்திற்கும் தெத்ரா பாக் நிறுவனத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அன்றாட வாழ்வில் மறுசுழற்சி நடவடிக்கையின் அவசியத்தை மாணவர்களுக்கு போதிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்களில் ஒன்றாகும் என்றார் அவர்.


Pengarang :