Dato’ Mohd Sayuthi Bakar bersama Ahli Majlis melihat bajet 2020 bertema Bandaraya Berdayatahan. Foto ihsan MBPJ
PBTSELANGOR

‘அடிப்படைக்கு திரும்பும்’ திட்டங்களுக்கு வெ.400 மில்லியன் ஒதுக்கீடு -எம்பிபிஜே பரிந்துரை

பெட்டாலிங் ஜெயா, அக்.2-

‘ஆளுமைமிக்க மாநகரம்’ என்று கருப்பொருளுடன் மாநகரத்தை மேம்படுத்தும் பொருட்டு அடுத்தாண்டு வரவு செலவு திட்டத்திற்காக 409851880 வெள்ளியை ஒதுக்கீடு செய்ய பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் பரிந்துரை செய்துள்ளது.

நிர்வாக முறையை ‘அடிப்படைக்கு திரும்பும்’ முறையில் வழிநடத்த கட்டமைப்பு மற்றும் பொது வசதி நிர்வாகம், பூங்கா நிர்வாகம், திடல் மற்றும் வடிவமைப்பு நிர்வாகம், திடக் கழிவு நிர்வாகம், நகர பாதுகாப்பு நிர்வாகம் போன்றவற்றின் செயல்திறன் மேம்படுத்தப்படும் என்று மாநகராட்சி மன்ற தலைவர் டத்தோ முகமது சாயுத்தி பாக்கார் தெரிவித்தார்.

இந்த மேம்பாட்டு நடவடிக்கையின்போடு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருப்பது உறுடி செய்யப்படுவதோடு இந்நிர்வாகங்கள் துடிப்பாக செயல்படுவதோடு இவற்றின் மையங்கள் அனைத்துலக அளவில் வடிவமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அதேவேளையில், பெட்டாலிங் ஜெயாவில் குற்றச்செயல்களி எண்ணிக்கையை குறைப்பதற்காகவும் பொது மக்களை உட்படுத்தும் சமூக மேம்பாட்டு திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்றார் அவ


Pengarang :