SELANGOR

சிலாங்கூரின் உணவு உற்பத்தி மிகவும் குறைவு!

ஷா ஆலம், நவ.13-

மாநிலத்திற்குத் தேவையான உணவு உற்பத்தியின் அளவு குறைந்த அளவில் இருப்பதால், அதன் ஏற்றுமதி விகிதமும் குறைவாக காணப்படுகிறது என்று அடிப்படை கட்டமைப்பு மற்றும் பொது வசதி, நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சாந்ர்த தொழிற்சாலை துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம் தெரிவித்தார்.

சிலாங்கூர் 25 முதல் 30 விழுக்காடு வரையிலான உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு இதர பொருட்களை இறக்குமதி செய்யும் கட்டாயத்தில் உள்ளது என்றார் அவர். இந்த எண்ணிக்கையானது மாநிலத்தின் உணவுப் பொருள் உற்பத்தி மிகவும் குறைந்த அளவில் இருப்பதைக் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.
தற்போதைக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் என்றால் அவை தேங்காய், கோழி முட்டை மற்றும் இறைச்சி வகைகள் மட்டுமே என்று அவர் விவரித்தார்.


Pengarang :