EXCO Kerajaan Tempatan, Pengangkutan Awam Dan Pembangunan Kampung Baru, Ng Sze Han
SELANGOR

இறுதியான சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வீர்!

ஷா ஆலம், டிச.16-

சிலாங்கூரில் சட்டவிரோத முறையில் செயல்படும் தொழிற்சாலைகள், அடுத்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் நடைபெறவிருக்கும் தொழிலாளர்களைச் சட்டப் பூர்வமானவர்களாக மாற்றும் நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. தவறினால் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தும் என்று நினைவுறுத்தப்பட்டன.

கடந்த அக்டோபர் 1 முதல் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள வாய்ப்பை சட்டவிரோதத் தொழிற்சாலை உரிமையாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநில அரசு விரும்புவதாக ஊராட்சி துறை, பொது போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

“இவ்வாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி 2020 செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தவணையானது 2008ஆம் தொடங்கிய இத்திட்டத்தின் கீழ் ஏழாவது முறை நீட்டிக்கப்பட்ட ஒரு தவணை” என்று அவர் சொன்னார். ஆகக் கடைசியாக அளிக்கப்பட்டுள்ள இவ்வாய்ப்பை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள் கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.


Pengarang :