SELANGOR

நான்கு மாற்று இடங்கள் 30% பாதுகாக்கப்பட்ட காடு நிலைநிறுத்தம் – மந்திரி பெசார்

ஷா ஆலம், பிப்.21-

930 ஹெக்டர் பரப்பளவிலான (2,300 ஏக்கர்) பரிந்துரைக்கப்பட்ட வட கோல லங்காட் பராமரிக்கப்பட்ட காட்டு நில வெளியேற்ற அறிக்கைக்குப் பதிலாக மாநில அரசு நான்கு பகுதிகளைப் பட்டியலிட்டுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.  சிலாங்கூரில் 30 விழுக்காடு காடுகளைத் தொடர்ந்து பாதுகாக்க சபாக் பெர்ணம், சுங்கை பாஞ்சாங் பகுதியில் 2 மாற்று இடங்களும் கோல சிலாங்கூர் மற்றும் கோல குபு பாரு, அம்பாங் பெச்சாவில் இரண்டு மாற்று இடங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட மாற்று இடங்கள் தீபகற்ப மலேசியாவின் மிகப் பெரிய பாதுகாக்கப்படும் சதுப்பு நில காடான ராஜா மூடா மூசா மாற்று காட்டுப் பகுதியை இணைக்கின்றன என்று அவர் விவரித்தார்.
இந்த இணைப்பின் மூலம் தீபகற்ப மலேசியாவில் மிகப் பெரிய பாதுகாக்கப்பட்ட காட்டு பகுதிகளைக் கொண்டுள்ள மாநிலமாக சிலாங்கூர் திகழும். அதே வேளையில், மலேசியாவில் இரண்டாவது அல்லது மூன்றாவது மாநிலமாக சிலாங்கூர் திகழும் என்று மாநில நடவடிக்கை அறையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமிருடின் தெரிவித்தார்.

பாதுகாக்கப்பட்ட காட்டு நில வெளியேற்ற அறிக்கை குறித்து பொது மக்களின் கருத்துகளுக்கு செவிமடுக்கும் மாநிலங்களில் ஒன்று சிலாங்கூர். சம்பந்தப்பட்ட அறிக்கை பரிந்துரை அளவில் மட்டுமே உள்ளது என்றும் மார்ச் 3ஆம் தேதி வரை மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :