PBTSELANGOR

ஹோட்டல் அறைகளின் வாடகைகளைக் குறைப்பீர்!

ஷா ஆலம், பிப்.13-

சுற்றுப் பயணிகளைக் கவரும் வகையில் அறைகளின் வாடகையைக் குறைத்துக் கொள்ளும்படி சிலாங்கூரில் உள்ள தங்கும் விடுதி நடத்துநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை துரிதப்படுத்தும் வழிகளில் இதுவும் ஒன்றாகும் என்று சுற்றுலாத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அஷாரி கூறினார்.

“இந்த வைரஸ் காரணமாக பல ஹோட்டல் முன்பதிவுகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால், ஹோட்டலின் அறை வாடகைகளைக் குறைத்துக் கொள்ளும்படி அதன் நடத்துநர்களுக்கு ஆலோசனை கூறி வருகிறோம்: என்றார். சிலாங்கூரில் உள்ள தங்கும் விடுதிகள் சங்கத்துடன் மாநில அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பேச்சு வார்த்தை மார்ச் மாதத்திற்கு முன்னதாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

முன்னதாக, மொத்தம் 95,000 ஹோட்டல் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மலேசிய சுற்றுலா முகவர்கள் சங்கம் ( மாட்டா) தெரிவித்தது.


Pengarang :